அடுத்த 1 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் மழை

 
v

அடுத்த ஒரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று நிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  

 கடந்த 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.  அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக  மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது .

ர்

இந்நிலையில்,  சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்ட ங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய இருக்கிறது.