பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது!

 
tn

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

rn

சென்னையில் அண்ணா சாலையில் நள்ளிரவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 8ம் தேதி சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டையில் தொடங்கி அண்ணா மேம்பாலம் வரை இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பைக்கில் சாகசம் செய்தனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது. இது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் எண்ணை கண்டறிந்து விசாரணை நடத்தினர்.  இதில் வாகனத்தின் உரிமையாளர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சேர்ந்த முகமது ஹாரிஸ் மற்றும் முகமது சைபான் என்பது தெரியவந்தது காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.

arrest
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை அருகே இருசக்கர வாகன வாகன சாகசத்தில் ஈடுபட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருவர் கைதான நிலையில் பெரோஸ் மாலிக் ,இம்ரான் அலிகான், முகேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.