"திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர் .

stalin


விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனின் மகள் வழி பேத்தி இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

rajinikanth and cm stalin

இந்நிலையில் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசிய போது,  இன்னொரு பக்கத்தில் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும்.  அந்த பிரச்னைக்கு நாம் செல்ல வேண்டாம். அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை. தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்.   இந்த தருணத்தில் மணமக்களை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.  இருக்கிற இடத்தில் விசுவாசமாகவும்,  நன்றி உணர்வுடனும் இருக்கக்கூடியவர் . கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்ஜிஆர் ,ஜெயலலிதா, கலைஞர்  அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் .என்னுடைய தலைமையிலான அமைச்சரவையில் தற்போது அமைச்சராக இருக்கிறார். பெரிய மருது, சின்ன மருதாக கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதையும் செய்ய முடியாது என சொல்லமாட்டார் என்றார்.