திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று சொன்னவர்கள் இப்போது தமிழ்நாடு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்- பாஜக

 
v

அடைந்தால் திராவிட நாடு இல்லை என்றால் சுடுகாடு என்று சொன்னவர்கள் எல்லாம் தமிழ்நாடு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார் பாஜக தமிழ் மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம்.  

 திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி குமரநாயக்கன்பேட்டையில் வெக்காளியம்மன் கோவிலில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடந்தது.   இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக தமிழ் மாநிலச் செயலாளர் வினோஜ் பி .செல்வம் அழைக்கப்பட்டு இருந்தார்.  அவர் இந்த விழாவில் பங்கேற்று ஒரே இடத்தில் 300க்கும்  மேற்பட்டவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

vs

 இந்த பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம் , ஒயிலாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மாணவர்கள் அசத்தினார்கள்.    நிகழ்ச்சியில் பாமக , திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பாஜக  இணைத்துக் கொண்டனர். 

 விழாவில் செல்வம் பேசிய போது,   அடைந்தால் திராவிட நாடு இல்லை என்றால் சுடுகாடு என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது தமிழ்நாடு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.   தமிழகம்,  தமிழ்நாடு எல்லாமே ஒன்றுதான் என்றார்.

 தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர். என்.ரவி அண்மையில் ஆளுநர் மாளிகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.   இதனால் திமுகவினர் அனைவரும் தமிழ்நாடு என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.   தமிழ்நாடு என்கிற ஹேஸ்டேக் டுவிட்டர் தளத்தில் பரப்பி வருகின்றனர். திராவிட நாடு என்று பேசி வந்த முதல்வர் முதல் திமுகவினர் அனைவரையும் இப்போது தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரித்து வருவதால் அது குறித்து தான் வினோஜ் பி. செல்வம் விமர்சனம் செய்திருக்கிறார்.