அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் செயல்படலாம் - ஓபிஎஸ் அறிவிப்பு..

 
ops


அதிமுகவில் இருந்து பல்வேறு  காரணங்களால்  நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவதாக  ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  

admk office

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் , அவர்களது வேண்டுகோளுக்கிணங்க , மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.  மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி கழக இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு,  ஏற்கனவே பணிபுரிந்தவர்கள்  மீண்டும் அந்தந்த பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைவில் நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

ops

கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊரட்சி செயலாளர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். “ என்று குறிப்பிட்டுள்ளார்.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை  கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேபோல் ஓபிஎஸும் கட்சியில் இருந்து சில நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில்   குறிப்பிட்டிருக்கிறார்.