இந்த முறை பரிசு தொகுப்பு இல்லை.. பொங்கலுக்கு ரொக்கமாக வழங்க அரசு முடிவு..

 
தமிழக அரசு - பரிசுதொகுப்பு அறிவிப்பு

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது   குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்புக்கு பதிலாக , ரொக்கமாக பணம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு… இன்று முதல் 4 நாட்களுக்கு விநியோகம்!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும்  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.  2022ம் ஆண்டு  பொங்கல்  பண்டியைகை முன்னிட்டு  தமிழகத்தில் சுமார்  1,297 கோடி  ரூபாய் மதிப்பீட்டில்  2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.  அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், துணிப்பை மற்றும் கருப்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
 

பொங்கல் டோக்கன்
அதன்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாகவும் , தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், ரூ. 500 கோடி அளவிற்கு மோசடி அரங்கேறியதாகவும்  எதிர்க்கட்சியினர்   கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.  இந்த நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 ரொக்கமாக  வழங்க  முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.