இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது - கடுப்பான மதுரை ஆதீனம்

 
m

 வம்பை விலைக்கு வாங்கி விட பாக்கறீங்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கடுப்பானார் மதுரை ஆதீனம்.  அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்து விட்டு சென்றார். 

 இந்துக்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வசையில் தரக்குறைவாக பேசியதாக திமுக எம்பி ஆர் ஆசாமி மீது குற்றச்சாற்று எழுந்துள்ளது.   இந்துவாக இருக்கின்ற வரையில் நீ சூத்திரன்.  சூத்திரனாக இருக்கின்ற வரையில் நீ விபச்சாரியின் மகன் .  இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன் இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன்.   இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று பேசி இருந்தார் ஆ.ராசா.

இதனால் கொதித்து எழுந்த பாஜகவினர், மற்றும் இந்து மதத்தினர் ஆ. ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசு என்கிற அளவுக்கு ஆவேசப்பட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை ஆலயத்தில் மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.   இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது மதுரை ஆதீனத்திடம் திமுக எம். பி. ஆ. aராசா இந்துக்கள் குறித்து தரக்குறைவாக , ஆபாசமாக பேசி இருப்பது குறித்த கேள்வியை எழுப்பினர்.  உடனே மதுரை ஆதீனம்,  இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று சொன்னார்.   அவர் மேலும்,  வம்பை இழுத்து விலைக்கு வாங்கி விட பார்க்குறிங்களா என்று கேட்டுவிட்டு முதலில் நான் செய்தியாளர்களை அழைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்து சென்றார்.

 இதன் பின்னர் மதுரை ஆதீனத்திடம் செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்ப முன்றபோது,  மதுரை ஆதீனத்துடன் வந்த பாஜகவினர் செய்தியாளர்களை தடுக்க இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் சலசலப்பு நீடித்தது.