இதனால்தான் அர்ச்சகரை ஒருமையில் பேசினேன்... திமுக பெண் கவுன்சிலர் விளக்கம்

 
llb

கோவில் அர்ச்சகரை ஒருமையில் பேசிய திமுக பெண் கவுன்சிலர் குறித்த வீடியோ ஒன்று சேலம் மாவட்ட அம்மாபேடை பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் அம்மாபேட்டை அடுத்த கிருஷ்ணாநகர் பகுதியில் சீதாராமச்சந்திர மூர்த்தி கோவில்.  இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.  இக்கோவிலில் கண்ணன் என்பவர் அர்ச்சராக பணிபுரிந்து வருகிறார். 

ப்ட்

40வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா,  கோவில் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுப்பதாகவும்,  அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதாகவும்  பேசும் அர்ச்சகர் கண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையடுத்து அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய தியபோது திமுக கவுன்சிலர் மஞ்சுளா தன்னை ஒருமையில் பேசும் வீடியோவை காட்டியிருக்கிறார்.  

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது.  இதற்கு மஞ்சுளா விளக்கம் அளித்திருக்கிறார்.  அர்ச்சகர் கண்ணன், கோவிலுக்கு வரும் பெண்  பக்தர்களிடம் தவறாக நடந்து வருவதாக பொதுமக்கள் பலரும் என்னிடம் புகார் சொன்னார்கள். அதனால் நான் அர்ச்சகரை கண்டித்தேன்.   மற்றபடிஅர்ச்சகர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.