ரஜினி நிம்மதியாக வாழ இதுதான் வழி! ப்ளூசட்டை மாறன் பரபரப்பு

 
ர

அண்மைக்காலமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத ரஜினிகாந்த் , நேற்று யோகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.   அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது,  ’’பணம், புகழ், பெயர்,  பெரிய பெரிய அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் என்று  அனைத்தையும் பார்த்த எனக்கு சந்தோசம்,  நிம்மதி 10 சதவிகிதம் கூட இல்லை’’ என்று உருக்கமாக சொல்லி இருந்தார்.

ர்ர்

  ரஜினி இப்படி பேசியதுமே தலைவருக்கு நிம்மதி இல்லையா? என்று அவர் ரசிகர்களும் உருக்கமுடன் பதிவிட்டு வருகின்றனர்.  ரஜினி நடித்த அண்ணாமலை படத்திலிருந்து ஒரு பாடலையே எடுத்து உங்களுக்காகவே வைரமுத்து எழுதியிருக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

ர்ர்ர்

கட்டாந்தரையில் துண்டை விரித்தால் தூக்கம் கண்ணில் சொக்குமே அது அந்த காலம்... மெத்தை விரித்தும் சுத்தப் பன்னீர் தெளித்தும் தூக்கம் கண்ணில் இல்லையே அது இந்த காலம் என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் சொல்லி வந்தனர்.   ஆனால் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனன் ரஜினி  பேச்சை கலாய்த்து இருக்கிறார்.

’’உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு... இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி.  ’’என்று சொல்லி இருக்கிறார்.  

இ

மாறன் சொல்லுவதும் சரிதானே என்று பலர் சொல்லி வரும் நிலையில், மாறனுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

 முன்னதாக பார்த்திபனின் இரவின் நிழல் விவகாரத்திலும் ரஜினியை சீண்டி இருக்கிறார் மாறன்.   உலகின் முதல் சினிமா என்று ரஜினி இரவின் நிழல் படத்தை வாழ்த்தியதற்கு,  ‘’அடடே..கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைவர் ரஜினியே கூறிவிட்டாரே’’என்கிறார்.

நடிகர் அஜித்குமாரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்,   தற்போது இரவின் நிழல் பட விவகாரத்தில் பார்த்திபனை வறுத்தெடுத்து வருகிறார்.   இந்த நிலையில் அவர் ரஜினியையும் சீண்டி இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.