அடுத்த 53 நாட்களுக்கு இந்த மயானபூமி இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

 
சென்னை மாநகராட்சி

ஈக்காட்டுத்தாங்கல் அருளாயம்பேட்டை  மயானபூமி அடுத்த 53 நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு 168-க்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் அருளாயம்பேட்டை இந்து மயானபூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி வரை 53 நாட்கள் மேற்கண்ட மயான பூமி இயங்காது.

அடுத்த 53 நாட்களுக்கு இந்த மயானபூமி இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.. 

எனவே பராமரிப்பு பணிகள் நடைபெறும் அடுத்த மாதம் 28-ந்தேதி வரையுள்ள நாட்களில் பொதுமக்கள் உடல்களை தகனம் செய்ய அருகில் உள்ள கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 139-க்குட்பட்ட மேற்கு சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள மின் மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.