திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்!!

 
tn

திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி கீழச்சேரியில் இயங்கி வரும்  சாக்ரீட் ஹார்ட்  அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  பள்ளிக்கு சொந்தமான விடுதியிலேயே  மாணவி தங்கி படித்து வந்த நிலையில் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

suicide

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சொந்த ஊரான தெக்கலூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக பாதுகாப்புக் கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

tn

இந்நிலையில் கீழச்சேரி தனியார் பள்ளி விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில்  பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி 12ஆம் வகுப்பு மாணவி  உயிரிழந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர்  தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.