திருத்தணி முருகன் கோவிலில் 19 நாட்களில் ரூ.1.42 கோடி உண்டியல் வசூல்

 
Thiruthani

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 19 நாட்களில் மட்டும் ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் உண்டியல் வசுலாகியுள்ளது. 

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும்  இருந்து ஏராளமான பகத்ர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்வார்கள். அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தேர்திக்கனடனாக கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இதனிடயே ஆங்கில புத்தாண்டு, கிருத்திகை மற்றும் முகூர்த்த காலங்களில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கோயில் உண்டியல்கள் 19 நாட்களில் நிறம்பின. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 2 நாட்களாக திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்த  பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 42 லட்சத்து 82 ஆயிரத்து 3 ரூபாய் பணமும், 555 கிராம் தங்கம், 8,862 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கியாக கிடைக்கப்பெற்றது தெரியவந்தது.