சூத்திரரை விமர்சனம் செய்தால் ஆத்திரம் வருவதற்கு ஹெச்.ராஜா என்ன சூத்திரரா?- திருமாவளவன்

 
thirumavalavan

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும்; இதை பாஜக உணர வேண்டும்!" - சொல்கிறார்  தொல்.திருமாவளவன் | thol thirumavalavan press meet in thoothukudi

அப்போது பேசிய திருமாவளவன், “இலங்கை கடற்படையால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசு தமிழக மீனவர்களின் மேல் அக்கறை செலுத்துவதே இல்லை . எக்கேடு கேட்டாலும் நமக்கு கவலை இல்லை என்கிற அலட்சியப் போக்கில் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்திய ஒன்றிய அரசு இதில் தலையிட வேண்டும் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கும் அவருடைய உடமைகளை திரும்ப பெறுவதற்கும் ஆவன செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அவர்களும் இது குறித்து இந்திய ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். 

நக்கீரன் முதன்மை செய்தியாளர் மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது அவர் வந்த வாகனத்தின் மீது மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்து இருக்கிறது. அதேபோல கேமரா மேன் அஜித் என்பவர் தாக்கப்பட்டு அவருடைய பல் உடைந்து இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூண்டியவர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் . அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகளாவிய சுதந்திரத்தை பறிப்பது மட்டுமல்ல, இது மிக மோசமான ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும். ஊடகவியலாளர்கள் எது குறித்தும் எழுத முடியாது, பேச முடியாது என்கிற ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அநாகரிகமான செயலாக உள்ளது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீட் விலக்கு  சட்ட மசோதா ஒருமுறைக்கு இருமுறை நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது மசோதாவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இரண்டாவது மசோதா கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு மாநில அரசின் அதிகாரத்தை எந்த அளவுக்கு உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. உடனடியாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுகிறேன்.

Thol Thirumavalavan Has a Way for Dravidian Parties to Keep BJP at Bay

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமையாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல அகில இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மனுதர்மத்தில் கூறியதை நானும் சுட்டி காட்டினேன். நான் ஒட்டுமொத்தமாக இந்து சமூகத்தைச் சார்ந்த பெண்களை எல்லாம் இழிவுபடுத்தியதாக இந்த சனாதன கும்பல் மிகப்பெரிய சமூகப் பதற்றத்தை உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் அதை கொண்டு போய் சேர்த்தார்கள். இந்து என்று ஒத்துக்கொண்டால் சூத்திரன் என்று ஒத்துக் கொள்ள வேண்டி வரும் சூத்திரன் என்று ஒத்துக்கொண்டால் அதற்கு மனிதர்மம் என்ன பொருள் தருகிறதோ அந்த பொருளையையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே நான் இந்து இல்லை என்று நீ ஏன் சொல்லக்கூடாது என்று சூத்திரர்களை பார்த்து சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுகிற அவர்களை பார்த்து வீரமணி சொன்னார். அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது. அந்த கேள்வி பிராமணர், சத்திரியர், வைசியர், என்பவர்களுக்கு பொருந்தாது. இந்துச் சமூகத்தில் உள்ள நாலாம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களுக்கு அந்த கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்லுகிறது

இவர்கள் சனாதரிகள் குறிப்பாக சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சூத்திரர்களாக இருப்பவர்கள் இந்த கேள்வி எழுப்ப வேண்டும் எச். ராஜா சூத்திரரா என்ற கேள்வியை எழுப்பு கடமைப்பட்டிருக்கிறோம் . உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின் படி எச். ராஜா சூத்திர ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது. இந்த ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரங்களை பார்த்து சொல்லுகிற கருத்து நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக 'இருக்கிற கீழ் சாதி என்று சொல்லப்படுகிற தலித் தள்ளாத பழங்குடி அல்லாத பிராமணர் அல்லாத சத்திரியர் அல்லாத வைசியர் அல்லாத ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் பாதுகாவலர்கள் இவர்கள்தான் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஒரு மாயையை உருவாக்க பார்க்கிறார்கள்” எனக் கூறினார்.