திருமாவின் கோழைத்தனம்... பாஜக கடும் தாக்கு

 
t

சமூகநீதி மண்ணில் சனாதனம் பரப்பும் சங்கி ஆளுநர் ரவி அவர்களே, இது நாகலாந்து, மேகாலயா அல்ல; தமிழ்நாடு! இங்கே உங்கள் சித்து விளையாட்டு செல்லாது! மதவாத மாயவித்தைகள் எடுபடாது! தில்லிக்கு நடையைக் கட்டுங்கள்! என்ற முழக்கம் எழுப்பி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

i

இதற்கு  தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,   ''இறையூரில் நடைபெற்ற கொடூர தீண்டாமை கொடுமையை அரங்கேற்றியவர்களை கண்டுபிடித்து, தண்டிக்காத தமிழக அரசை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட தைரியம் இ‌ல்லாம‌ல்  ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது கோழைத்தனம்'' என்கிறார்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து முதற்கட்டமாக ஏழு பேருக்கு சம்பன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன . 

ass

 இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதற்கு பதில் அளித்த முதல்வர் மு. க .ஸ்டாலின் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 

சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் குடிதண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் பொதுமக்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில், திருமாவளவனுக்கு மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாராயணன்.