மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 3வது சுற்று நிறைவு

 
Jallikattu

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 3ம் சுற்று நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை 192 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.   ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. 

போட்டியில் 3ம் சுற்றூ நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 192 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2ம் சுற்று நிறைவடைந்த போது 115 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு இருந்ததன. 2ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தில் 9 காளைகளை அடக்கி முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.