மைனர் விஜய்க்கு எதிராக குவியும் புகார்கள்! தில்லை நடராஜரின் நடன சர்ச்சை!

 
ம்

தில்லை நடராஜர் - காளி நடனம் குறித்து யூ 2 புருட்டஸ்  யூடியூப் சேனலில்  மைனர் விஜய் பேசியது இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இதனால் மைனர் விஜய்க்கு எதிர்ப்பு வலுக்கிறது.  மாவட்ட ஆட்சியர்கள், டிஜிபி அலுவலகத்தில் அவரை கைது செய்யக்கோரி புகார்கள் குவிகின்றன.

’நடராஜர் காலை தூக்கி நிற்க இதுதான் காரணம். மனசு புண்பட்டா கம்பெனி பொறுப்பாகாது’ என்று தலைப்பில், யூடியூப்பர்  யு டூ புரூட்டஸ் மைனர் விஜய் வீடியோவை வெளியிட்டிருந்தார்.   ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய,  ’இந்து மதம் எங்கே போகிறது?’என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த விசயங்களை எடுத்து இந்த வீடியோவில் பேசியிருந்தார்.  

வ்

இது இந்து மக்களை புண்படுத்திவிட்டது.  இந்து கடவுளை அவமதித்து விட்டார் என்று பாஜகவினர் கொதித்தெழுந்துள்ளனர்.  இதற்கு அந்த யூடியூபர்,  ’’நான் சொல்றது பொய்யிண்ணா உண்மை கதைய நீ சொல்றா வெண்ண... ஆதாரம் : இந்து மதம் எங்கே போகிறது. தி.க. காரவங்க எழுதுன புக் இல்ல... ராமானுஜ தாத்தாச்சாரியார் எனும் பார்ப்பனர் எழுதுன புக்தான்..’’.என்று பதிலடி கொடுத்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசுவும்,  ‘’அக்னிஹோத்ர ராமானுஜ தாத்தாச்சாரியர் சொன்னால் சரி? மைனர் விஜயி சொன்னால் தவறா? நடராஜர் எதற்காக ஆடினார் என்பதை இந்து மதம் எங்கே போகிறது? நூலில் ஆச்சார்யார் எழுதியதை  தம்பி மைனர் கோனார் உரை எழுதியதற்காக பார்ப்பன எடுபிடிகள் கொதிப்பது ஏன்?’’என்று கேட்டிருந்தார்.

ன்

இந்த விவகாரத்தில் திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி,  ‘’பார்ப்பனருக்கு பின்புத்தி என்பார்கள்; இப்போதுதான் தெரிகிறது பார்ப்பன அடிமைகளுக்கும் அப்படித்தான் என்று. எப்படிப் பிரித்துப் பார்ப்பது?   " எல்லா புராணங்களையும் தடை செய்!" ..... என்பதே பொருத்தமாக இருக்கும். பாஜக  
 செய்யுமா? குறைந்த 'பக்ஷம்' .... " அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி ஒழிக!" " இனத் துரோகி தாத்தாச்சாரி ஒழிக!"  என்றாவது சொல்ல வேண்டும்’’ என்று கேட்டிருந்தார்.

h

’’தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய்’’ என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.  ‘’மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர் சிலர்! ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?’’ என்று கேட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கூட வியப்பளிக்கவில்லை. ஆனால், அந்த  அயோக்கியனை கண்டிப்பதற்கு பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம். அரசியல் என்கிற தொழிலை பாதுகாக்க அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு என்று கடுமையாக சாடியிருந்தார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. . 

ann

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அந்த கொடியவனை கைது செய்ய காவல்துறை தயங்குவதேன்? இது தான் பேச்சுரிமை என்றால், இனி யார் வேண்டுமானாலும் எந்த கடவுள் குறித்தும் தரம் தாழ்ந்து பேசும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உருவாகும் என்று எச்சரித்திருந்தார் நாராயணன். தமிழ்நாடு காவல்துறை  தன் கடமையை செய்ய வேண்டும்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் இது போன்ற களவாணிகளை, புறம்போக்குகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

u2

 வேலூரில் இந்து முன்னணி சார்பில் இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து சிவன் வேடம் அணிந்து மேளங்கள் இசைக்க ஊர்வலமாக சென்று சத்துவாச்சாரியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம்,  மைனர் விஜய் என்பவர் இந்து மதத்திற்கு எதிராகவும்,  நடராஜர் சாமியை அவதூராக பேசியதை கண்டித்தும் சட்டப்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி மனு அளித்தனர்.

 அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகி சிவகுமார்,  டிஜிபி அலுவலகத்திற்கு சென்று யூ டூ புரூட்டஸ் என்ற பெயரில் மைனர் விஜய் என்பவர் தில்லை நடராஜர் நடனம் குறித்து அருவருப்பாக பேசிய வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.   இந்த சேனலை முடக்க வேண்டும்.   மைனர் விஜய் மீதும் அவரது பின்னணியில் இருக்கும் சமூக விரோத கும்பல்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ன்

 சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டுவரும் வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன்,  ஜெகம் பெண்கள் அமைப்பு நிர்வாகி சுந்தரி ஆகியோரும் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சேனலை முடக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.