பாஜகவில் "பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை" என்ற ஒரு அமைப்பு கிடையாது!

 
annamalai

பாரதிய ஜனதா கட்சியில் "பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை" என்ற ஒரு அமைப்பு கிடையாது என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.

bjp

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பிற்கு திரு. K. இராஜு என்பவர் மாநில தலைவர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

tn
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்கின்ற ஒரு அமைப்பு கிடையாது. கட்சியின் சின்னம், பாரத பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை தவறுதலாக உபயோகப்படுத்தினால், உபயோகப்படுத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற போலியான அமைப்பை உருவாக்கியும், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்  ஸ்டீல் அருள் மாநில செயலாளர், உள்ளாட்சி பிரிவு, இராஜு, N.P. கருணாகரன் ஆகிய பொறுப்பாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.