குழந்தை பிறந்தவுடன், இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு - தமிழக அரசு

 
pregnant

அரசு பெண் ஊழியர்களுகு குழந்தை பிறந்த உடன், இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. 

Pregnant Women, Persons With Disability Exempted From Joining Office Amid  COVID-19 Crisis

கடந்த 2016-ம்ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது, அதன்பின் கடந்த ஆண்டு இந்த விடுமுறை கால அளவு ஒரு வருடமாக உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் எதிர்பாராத விதமாக இறந்தாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, குழந்தை பிறந்து, பின் சிறிதுகாலத்திலேயே இறந்துவிட்டாலும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என தெரிவித்துள்ளது.