நீதிமன்ற தீர்ப்பு என்பது இறைவன் கையில் உள்ளது - ஓபிஎஸ்

 
tn

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Ops

அதிமுக நிறுவனரும்,  முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

ops

அவருடன் வெள்ளை மண்டி நடராஜன்,  மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஓ .பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,  நான் சர்வாதிகாரி இல்லை;  அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.  தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் தான் உள்ளது என்றார்.