தேங்காய்பட்டினம் துறைமுகம் : மீனவர் உடலை வைத்துக்கொண்டு 1000 பேர் போராட்டம் ..

 
மீனவர்கள் போராட்டம்

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் பைபர் படகு கவிழ்ந்து மாயமானவரின்  உடலை வைத்து, மீனவ குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 1000 பேர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் தவறான கட்டமைப்பு காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.   துறைமுகத்தை திட்டமிடாமல் கட்டமைத்ததன் காரணமாக முகத்துவாரம் குறுகியதால் அடிக்கடி முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டு ஏற்படுகிறது.  இதனால் அந்த முகத்துவாரம் வழியாக வெளியேறும் படகுகள் விபத்துக்குள்ளாகிறது. இதேபோல் கடையில் இருந்து கடலுக்குச் செல்லும் படகுகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.  இதுவரை இந்த பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக  28 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவ்வாறு ஒவ்வொரு முறை உயிரிழப்பு ஏற்படும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.   காவல்துறையினர்   துறைமுகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து  போராட்டத்தை கைவிடுவர்.  

 தேங்காய்பட்டினம் துறைமுகம்  :  மீனவர் உடலை வைத்துக்கொண்டு 1000 பேர் போராட்டம் ..

இந்த நிலையில் நேற்று முன்தினம் முகத்துவாரம் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு திரும்ப வரும்போது பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர்  மாயமானார்.   அவரை  தேடும் பணியில்  இரண்டு நாட்களாக மீனவர்கள் மட்டுமே  ஈடுபட்டு வந்துள்ளனர்.  கடலோர காவல் படையினரிடம் உதவி கேட்டும் அவர்கள் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.  இந்நிலையில் அப்பகுதி மீனவர்களாகவே   தேடி மாயமான மீனவரின் உடலை மீட்டு வந்த நிலையில்,   பிரேத பரிசோதனைக்காக மீனவரின் உடலை வழங்க மாட்டோம் என்று  கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 தேங்காய்பட்டினம் துறைமுகம்  :  மீனவர் உடலை வைத்துக்கொண்டு 1000 பேர் போராட்டம் ..

 இறந்தவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,  முகத்துவாரம் சீரமைப்பு பணிகளை  உடனே  தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   சீரமைப்பு பணிக்காக  ரூ.  200 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில்,  ஆனால் பணிகள் ஏதும் இதுவரை தொடங்கவில்லை என்றும் அவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.   மேலும் மணல் அள்ளும் இயந்திரத்தை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள்  துறைமுக வாசல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.