தருமபுரம் ஆதீன கோபுர கலசங்கள் திருட்டு!

 
Theft of Dharmapuram Athena tower urns! Theft of Dharmapuram Athena tower urns

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் காவிரி கரையோரம் உள்ள மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்தத்தில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான 5 விமான கோபுர கலசங்கள் திருடபட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும் திருமஞ்சன வீதியில் ஆதீனகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் எனும் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த குருமூர்த்தத்தில் கடந்த 2-ஆம் தேதி 20-வது குருமகாசன்னிதானத்திற்கு குருபூஜை நடந்துள்ளது. அதன்பின்னர் மறுநாள் ஆதீன ஊழியர்கள் அங்கு சென்றபோது குருமூர்த்தத்தின் விமானத்திலிருந்த 1 கலசங்கள், முகப்புப் பகுதியில் உள்ள நுழைவாயிலின் மேல் பகுதியில் இருந்த 4 கலசங்கள் என மொத்தம் 5 கலசங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.  

செம்பு மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த 5 கலசங்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆதீனத்தின் பொதுமேலாளர் கோதண்டராமன்   மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.