கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்.. தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குக...- அன்புமணி..

 
anbumani

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க  வேண்டுமென பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்.. தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குக...- அன்புமணி..

இதுகுறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “கொள்ளிடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அணைக்கரை மதகுசாலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகாஷ், மனோஜ் ஆகியோர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபங்களும். வெள்ளத்தில் அடித்துச் இன்னொருவரான அப்புவை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

 கொள்ளிடம் ஆறு

உயிரிழந்த ஆகாஷ், மனோஜ் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும். கொள்ளிடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டாலும் அதிர்ச்சி காரணமாக பேசும் திறனை இழந்த கொளஞ்சி என்பவருக்கு உரிய மருத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.