உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

 
tn

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

tn

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்.  மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் அருகே உறுதி மொழியை ஏற்றுக்கொள்ளனர். அதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் 17-1-2023 அன்று தமிழக பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும்,  நமது கலாச்சாரத்தையும்,  பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும் , விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எந்தவித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம் என்றும் உறுதிமொழி அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ttn

இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பச்சை கொடி அசைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் மூன்றுb கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. முன்னதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்க தயாராகும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  ஜல்லிக்கட்டில் களமிறங்க ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 மருத்துவ குழுக்கள் , 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.