ஈபிஎஸ்-ஐ மறித்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்த பெண்கள்

 
eps

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கில் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்க குமாரபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியில் வந்து காரில் ஏறி புறப்பட்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் முன் சென்ற பெண்கள் அவரிடம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கொலைவெறித் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க எடப்பாடி  பழனிசாமி கோரிக்கை | Murder hysteria at the Naam Tamil Party public meeting  ...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள கலைமகள் வீதி, மணிமேகலை வீதி, இந்திரா நகர் மற்றும் குள்ளங்காடு கலைவாணி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீரால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு  காவிரி கரையோரம் வசிக்கும் சுமார்  340 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிமுக சார்பில் இன்று உணவு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். 

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோடு மாவட்டம் பவானி செல்வதற்காக வந்த பொழுது, அவருடைய காரின் முன்பு நின்ற பெண்கள் தற்போது சமையல் எரிவாயுவின் விலை, மின் கட்டணம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாகவும், மளிகை மற்றும் அடிப்படை பொருட்களின் விலை மிக உயர்ந்துள்ளன. இதை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.