கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

 
wife

சென்னை திருவொற்றியூரில் கள்ளக்காதலனுடன் கணவனை கொல்ல முயற்சி மனைவி உட்பட 3 பேர் கைது செய்யபட்டனர்.

murder

திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். மீனவரான இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அபிமுனிசா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. சிறிது காலம் கணவருடன் வாழாமல் அருகில் இருக்கும் பூங்கவனபுரம் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் வாழ்ந்ததாக தெரிகிறது. மேலும் கணவன் அடிக்கடி தொந்தரவு செய்வதாக யுவராஜ்யிடம் அபிமுனிசா கூறியுள்ளார்.

இதையடுத்து போதையில் இருந்த யுவராஜ் தனது நண்பர் ராம் குமாருடன் சேர்ந்து திருச்சினாங்குப்பம் கடற்கரையில் படகை பழுது நீக்கி கொண்டிருந்த மணிமாறனை சுத்தியலால் தலையில் அடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே யுவராஜ் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து, பூங்காவனபுரத்தைச் சேர்ந்த யுவராஜ், ஒண்டிகுப்பத்தை சேர்ந்த ராம் குமார், மணி மாறனின் மனைவி அபிமுனிசா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.