சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்படும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

 
tn

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக  உண்மை கண்டறியப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ttn

திருப்பூரை சேர்ந்த பழனி குமார் பனியன் நிறுவனத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில் மனைவி சுபஸ்ரீ கோவை ஈஷா யோகா மையத்துக்கு ஏழு நாள் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 11ம் தேதி வந்துள்ளார். பயிற்சி முடித்து 18ஆம் தேதி சுபஸ்ரீ வீட்டுக்கு செல்லவில்லை. இது தொடர்பாக பழனிகுமார் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஆலந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததில்,  சுபஸ்ரீ சாலையில் நடந்து செல்லும் காட்சிகளும்,  அந்த வழியாக காரில் ஏறி சிறிது தூரம் சென்ற காட்சிகளும்,  பிறகு இறங்கி ஓடுவது போன்ற காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  இதன் தொடர்ச்சியாக மாயமான சுபஸ்ரீ செம்மேட்டை அடுத்த காந்தி காலனியில் உள்ள ஒரு விவசாயத் தோட்ட கிணறில்  சடலமாக கடந்த 1ம் தேதி கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

stalin

இந்நிலையில் சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (postmortem). சுபஸ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் (CCTV) பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும  என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.