சென்னை நோக்கி வந்த ரயில்.. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..

 
சென்னை நோக்கி வந்த ரயில்.. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..


கூடூர் சந்திப்பு அருகே  அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில்லில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

 சென்னையில் இருந்து அகமதாபாத் சென்றடைந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை  ஏற்றிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது.  அப்பொழுதுஆந்திர மாநிலம் திருப்பதி  அருகே சென்று கொண்டிருந்த போது,  எதிபாரதவிதமாக பேன்ட்ரீ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்து  துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள், உடனடியாக ரயில்வே  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து கூடூர் சந்திப்பு   ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார்.

சென்னை நோக்கி வந்த ரயில்.. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..

இதனைத் தொடர்ந்து மற்ற ரயில் பெட்டிகளுக்கு   தீ பரவாதபடி நெருப்பு முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  இந்த தீ விபத்து  சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம்  ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  மேலும் ரயில்வே அதிகாரிகளின் எச்சரிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  இந்த விபத்தில்  எந்த வித அசம்பாவித சம்பவம் ஏற்படாததால் ரயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.