நாளை சென்னை வந்தடைகிறது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

 
tn

சர்வதேச செஸ்  ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  188 நாடுகளைச் சேர்ந்த 2500 வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.  பிரம்மாண்டமாக நடைபெறும் இப்போட்டிக்கு அரங்கங்கள் தயார் நிலையில் உள்ளன.  செஸ் போட்டிக்காக தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தம்பி சிலைகள்,  இலட்சினை மற்றும் செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் காய்களின் சிற்பங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.

tn

செஸ் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களின் வரவேற்கும் வகையில் போட்டி அரங்க வளாகத்தின் நுழைவு சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்ட கம்பங்கள் வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. செஸ் போட்டி நிறைவடையும் வரை சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Thumbnail image

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாளை சென்னை வருகிறது.  இதனிடையே ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மதுரையிலிருந்து ஒலிம்பியாட்  ஜோதி நேற்று இரவு நெல்லை வந்தது.  நாட்டின் பலவேறு இடங்களை சுற்றிவந்த நிலையில்  செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாளை சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.