கடனை கேட்டு கண்டபடி திட்டியதால் சிறுமியை கடத்திச்சென்ற வாலிபர்கள்

 
s

 கடனைக் கேட்டு கண்டபடி திட்டியதால் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அந்த சிறுமி பெட்ரோல் பங்க் அருகே மீட்கப்பட்டுள்ளார்.

 நாமக்கல் மாவட்டத்தில் காளி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.  டெப்போ லாரி டிரைவரான இவரது மனைவி கவுசல்யா.  இத்தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 

 கடந்த 30ஆம் தேதியன்று சரவணன் லாரி ஓட்ட சென்றுவிட்ட நிலையில் ,   மகன் -மகளுடன் கௌசல்யா மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தாயையும் மகனையும் கட்டிப்போட்டு விட்டு 11 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.   இதன் பின்னர் மீட்கப்பட்ட தாயும் மகனும் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

r

 போலீசார் உடனே 7 தனிப்படைகள் அமைப்பு சிறுமியை தேடிவந்தனர்.  நேற்று அதிகாலை 1. 30 மணிக்கு சரவணன் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் முருகேசனுக்கு செல்போனில் அழைப்பு வந்திருக்கிறது.  அதில் பேசியவர் ,  அலங்காநத்தம் பிரிவு பெட்ரோல் பங்க் அருகில் சிறுமி மௌலிஷ்னா  விடப்பட்டு இருக்கிறார் என்று சொல்ல,    உடனே அப்பகுதிக்குச் சென்று போலீசார் சிறுமியை மீட்டனர்.

 விசாரணையில்,  சரவணன் குடியிருக்கும் வீட்டில் மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருந்து வந்தார்.  அப்போது சரவணனிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.  பணத்தை கேட்டு  உடனடியாக மணிகண்டன் கொடுக்காததால் மணிகண்டன் மனைவியை தரக்குறைவாக பேசியிருக்கிறார் சரவணன்.  இதனால் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்திருக்கிறார் மணிவண்ணன்

 மணிகண்டன் மனைவியை சரவணன் தரக்குறைவாக பேசி இருக்கிறார்.   இதற்கு பழிவாங்கும் விதமாகத் தான் சிறுமியை கடத்தி சென்றிருக்கிறார் மணிகண்டன்.     கடத்திய வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.