திடீரென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா???

 
gold

தமிழகத்தில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.  

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகபட்ச  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.   ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியான உயர்வை எட்டுவது  வாடிக்கையாகிவிட்டது. பின்னர் அவ்வப்போது  இறங்குமுகமும் காட்டுவதுண்டு.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இதற்கிடையே  கடந்த சில வாரங்களாக தங்கம் விலை  குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும்  மகிழ்ச்சியை அளித்தது. இதனால்  தங்கத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.  பின்னர் மீண்டும் விலையேற தொடங்கியது.  நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்  ரூ.38,064 ஆகவும்,  ஒருகிராம்  கிராமுக்கு  ரூ.4,758 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது.  

திடீரென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா???

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,064 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ஒரு கிராம்  ரூ.4,758-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல்  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40  காசுகள் உயர்ந்து ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.