காதல் விவகாரம்- பட்டப்பகலில் பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர்

 
கழுத்தை அறுத்து கொலை

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் பள்ளி மாணவியை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஒருதலைக் காதல்; மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி: இளைஞரைத்  தாக்கி போலீஸில் ஒப்படைத்த மக்கள் | ஒருதலைக் காதல்; மாணவியின் ...

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் வசிக்கும் கண்ணம்மாள் (வயது 48) என்பவரது மகள் சுவேதா (வயது 16). இவர், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை பள்ளியில் இருந்து பேருந்தில் பவானிசாகர் திரும்பி, பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மான் (எ) நவீன் (வயது 20) திடீரென மாணவியை, தனது கையால் வைத்திருந்த பிளேடால் சரமாரியாக கழுத்தை அறுத்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த சுவேதா அவரிடமிருந்து போராடி தப்பித்து அலறி துடித்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் மாணவியை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாணவி சுவேதா, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதா என பவானிசாகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளி நவீனை தேடிவருகின்றனர்.