தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மகன்

 
v

தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் வாழ்ந்து வந்துள்ளார் மகன்.   அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   ஆனால் தாய் இயற்கை மரணமா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை, கொலையா? என்பது  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் 50 வயதான விஜயா.    விஜயாவின் மகன் மகனுக்கு 22 வயது ஆகிறது.  அவர் மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்று இந்த அப்பகுதியினர் சொல்கின்றனர்.

வ்வ்

 இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விஜயாவை வெளியே காணவில்லை.   அவரது மகனும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.  இப்படி இருக்கும் போது திடீரென்று வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது.

 இதனால் சந்தேகம் அடைந்த  அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து வீட்டில் உள்ளே நுழைந்து பார்த்தபோது அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.   அவரது உடல் அருகில் மகன் இருந்திருக்கிறார்.

 இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்,   விஜயாவின் அழுகிய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.  பாதிக்கப்பட்ட அவரது மகனிடம் விஜயாவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 விஜயாவை அவரது மகனே கொலை  செய்திருக்கலாம் என்று அப்பகுதியினர் சொல்லி வருகின்றனர்.   விஜயாவின் மரணம் இயற்கையானதா?  கொலை செய்யப்பட்டாரா?  தற்கொலை செய்து கொண்டாரா?  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பிரேதபுர பரிசோதனை முடிவுகளின்அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ளலாம் என்ற  முடிவில் உள்ளனர்.