இனி யாரும் இதுபோல் செய்யக்கூடாது என்பதற்காக நீதிபதி கொடுத்த தண்டனை

 
thi

 இனிமேல் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நூதன தண்டனையை கொடுத்திருக்கிறார் நீதிபதி ராதிகா.

 திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அந்த சிறுவனுக்குத் தான் ஞாயிறுதோறும் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார். 

n

 இந்த 17 வயது சிறுவன் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி  ராதிகா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.

 தீர்ப்பின் போது அந்த சிறுவன் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்று அங்கு சுகாதாரத்துறையினர் கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  இனிமேல் இதுபோன்ற தவறுகளை யாரும் செய்யக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஒரு தண்டனை விதிப்பதாக நீதிபதி ராதிகா குறிப்பிட்டார்.