குரங்கம்மை தொற்று அறிகுறி - புனேவிற்கு அனுப்பப்பட உள்ள புதுக்கோட்டை நபரின் மாதிரிகள்!!

 
tn

குரங்கம்மை தொற்று அறிகுறி உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த நபரின் மாதிரிகள் இன்று புனேவிற்கு அனுப்பப்பட உள்ளது.

 

tn
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது இளைஞர்  ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்தார்.  விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு குரங்கம்மை தொற்று நோய்க்கான அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து இளைஞரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. 

tn

இந்நிலையில் குரங்கம்மை தொற்று அறிகுறி உள்ள புதுக்கோட்டை சேர்ந்த நபரின் மாதிரிகள் இன்று புனேவிற்கு அனுப்பப்பட உள்ளது.   இதன் முடிவுகள் வந்த பிறகு தான் குரங்கம்மைநோய் தொற்று பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். முன்னதாக தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு  தீவிர  பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் சந்தேகத்திற்குரிய மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அங்கு  தோல், புண் மாதிரி, சிறுநீர், பிளாஸ்மா உள்ளிட்ட பரிசோதனைகள் குரங்கு அம்மை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும். சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க மத்திய  அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது குறிப்பிடத்தக்கது.