எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையன்

 
கொள்ளையன்

செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பிரபல பிட்பாக்கெட் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

DMK AIADMK leader led by Edappadi Palanisamy protests in Salem condemning  the government | தி.மு.க. அரசை கண்டித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்போது கேளம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த அதிமுக இளைஞர் அணி செயலாளர் சுமன் என்பவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை ஒரு நபர் திருடியுள்ளார். உடனே சுதாரித்த சுமன் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் பிட்பாக்கெட் அடித்து மாட்டிய நபர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த  சசிக்குமார் (46) என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சசிகுமார் பிட்பாக்கெட் அடிப்பதையே தனது தொழிலாக வைத்துள்ளார். தமிழகத்தில் ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் என மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தொடர்ச்சியாக பிட்பாக்கெட் அடித்து வருவதே இவரது தொழிலாக இருந்து வந்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை மாவட்டங்களில் பிட்பாக்கெட் அடித்து  கைதாகியுள்ளார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.