தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்குனு தெரியுமா??

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகபட்ச  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.   ஜூலை 1ம் தேதி மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியான உயர்வை எட்டுவது  வாடிக்கையாகிவிட்டது. பின்னர் அவ்வப்போது சற்று விலைகுறைவதுமுண்டு..  இதற்கிடையே  கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து  சவரன் ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியது.  இது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்  ரூ.39,400 ஆகவும்,  ஒரு கிராம்   ரூ.4,925 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தும் ஒரு சவரன்  ரூ.39,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,  ஆபரணத் தங்கம்  விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம்  ரூ.4,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 66.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   ஒரு கிலோ வெள்ளி  ரூ.66, 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.