முட்டை விலை ஒரே நாளில் அதிரடி குறைவு

 
egg

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை   ரூ.5.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

egg price

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.65 காசுகளில் இருந்து 20 குறைத்து 5.45 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (20-1-2023) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (21-1-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 12 நாட்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.65 ஆக நீடித்து வந்தது. இந்த விலை தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலை ஆகும். தற்போது முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் அதிரடியாக 20 காசுகள் சரிவடைந்துள்ளது. தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.