மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் - மநீம வரவேற்பு

 
kamal kamal

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளைப் பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது.

sc

மகாராஷ்டிரா,  கோவா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.  சந்திர சூட் கலந்து கொண்டார்.  அவர் பேசிய அவர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைக்க வேண்டிய அவசியத்தை தலைமை நீதிபதி எடுத்துரைத்தார்.  இதற்கான தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்று ம்  அவரது கருத்து பாராட்டத்தக்கது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கூறியுள்ளனர்.



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல, உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டுமென அறிவிப்பதும் அவசியமாகும். எனவே, சாதாரண மக்களும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளும் வகையில், மாநில மொழிகளைப் பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது." என்று பதிவிட்டுள்ளது.