முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!!

 
rb udhayakumar

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

udhayakumar

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ஆர்.பி. உதயகுமார்,  ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

op

இந்நிலையில் ஓபிஎஸ் தலைமை பதவி ஏற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர்.பி. உதயகுமார் பேசிய நிலையில் பாடை கட்டி தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சரிடம் சரவணப் பாண்டியன் பேசியுள்ளார். ஓபிஎஸ்ஐ கடுமையாக விமர்சித்த ஆர்.பி.  உதயகுமாருக்கு போன் செய்து தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன், பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு எப்போது வருவீர்கள்,  ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளீர்கள் . எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது என்று  மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பான புகார் அடிப்படையில் சரவண பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்