கள்ளக்குறிச்சி பள்ளி கட்டடத்தை இடித்தவர் கைது!!

 
ttn

கள்ளக்குறிச்சி வன்முறையின் போது பள்ளி கட்டடத்தை இடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தொடர்பாக மரணம் தொடர்பாக நீதி கேட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.   பள்ளி வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதுடன்,  அங்கிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டன. மாணவியின் இறப்பு , கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.  அத்துடன் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் உள்ளது.  கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அத்துடன் கலவரம் நடந்த அன்று யாருடைய ட்விட்டர் கணக்குகளில் இருந்து எல்லாம் வதந்தி பரப்பப்பட்டது என்ற தகவல்களை காவல்துறை சேகரித்து  வருகின்றனர்.

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது பள்ளி கட்டடத்தை இடித்து சேதப்படுத்திய மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கடலூர் வண்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக வசந்த் என்பவர் நேற்று கைதான நிலையில் மேலும் மனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ ,போட்டோ ஆதாரங்களை கொண்டு கைது நடவடிக்கைகள் தற்போது தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.