கதறும் மக்களின் ஆற்றாமைக்கு என்ன விடையிறுக்க இயலும்?

 
tn

 எங்கள் பிணங்களின்மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தைக் கட்டமுடியும் என கதறும் மக்களின் ஆற்றாமைக்கு என்ன விடையிறுக்க இயலும்?  என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது  ட்விட்டர் பக்கத்தில், "பூர்வீக வாழிடத்தைப் பறிகொடுத்துவிட்டு எமது வாரிசுகள் அநாதைகளாகத் திரிய வேண்டுமா? என கேட்டு ஏகனாபுரம் மக்கள் கண்ணீர் சிந்தினர். அவர்கள் மனமுடைந்து குமுறி அழும்போது எம் நெஞ்சை உலுக்கியது. எனது விழிகளின் விளிம்புகளில் முட்டி நின்றன வெப்பம் தெறிக்கும் கண்ணீர்த் திவலைகள். எங்கள் பிணங்களின்மீதுதான் பரந்தூர் விமான நிலையத்தைக் கட்டமுடியும் என கதறும் மக்களின் ஆற்றாமைக்கு என்ன விடையிறுக்க இயலும்?  இங்கே பிறந்தோம்; வளர்ந்தோம்; வாழ்கிறோம். இந்நிலையில் எப்படி இம்மண்ணை, எம் தாய் மண்ணை விட்டு வெளியேறுவோம்?அது ஒருபோதும் இங்கே நடவாது என பொங்கினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.