"அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
mk Stalin biopic

அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை  என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ttn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.10.2022) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள  பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின்  முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இச்சிலையானது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால்  கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி  அம்பேத்கரின்  132-ஆவது பிறந்த நாளன்று வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த மே மாதம்  அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , "அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை! அதில் உறுதியுடன் நடைபோடுவோம்! " என்று பதிவிட்டுள்ளார்.