பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை சாப்பிட்ட முதியவர்!

 
Food

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலரான சாய் மயூர் என்ற இளைஞர் நாள்தோறும் தெருக்களில் அலையும் சமூக நாய்களுக்கு சொந்த செலவில் உணவுகளையும், பிஸ்கெட்டிகளையும் வழங்கிவருகிறார். மேலும் தெரு நாய்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ, தெரு நாய்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ நாயை மீட்பதற்காகவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வைத்துள்ளார். 

Thumbnail image

இந்நிலையில்  மதுரை காந்தி மியூசியம் அருகேயுள்ள கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள நாய்களுக்கு உணவை போட்டுள்ளார். அதனை நாய்கள் சாப்பிட்ட பின்பாக மீதியிருந்த உணவை அந்த பகுதியில் சாலையோரமாக படுத்துகிடந்த முதியவர் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த சமூக ஆர்வலர் மயூரி இது நாய் சாப்பிட்ட சாப்பாடு இதனை சாப்பிடாதீர்கள் என தடுத்து அவரை அழைத்து சென்று அருகில் உள்ள டீக்கடையில் வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து பசியாற்றினார். அவரிடம் விசாரித்தபோது மதுரை புதூர் சங்கர்நகர் பகுதியை சேர்ந்த முகம்மது ஹனிபா (57) எனக் கூறினார். மேலும் தனக்கு தகப்பனார் தவிர யாரும் இல்லை என கூறி விவரங்களை முழுமையாக கூறிவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர் மயூரி டீ கடையில் முகம்மது ஹனிபா தினசரி என்ன கேட்டாலும் சாப்பிட வழங்குங்கள் எனவும் அதற்கான தொகையை மாதம் தோறும் செலுத்திவிடுகிறேன் என கூறியுள்ளார்.