ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை!

 
tn

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

rb

இலங்கையில்  பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம்   உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத  பொருளாதார ஏற்பட்டுள்ளது.   விலைவாசிகள் வின்னை முட்டும் அளவிற்கு   கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,  அத்தியாவசிய பொருட்களான மருந்துகள்,  பால்,  மாவு,  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால்   இலங்கை மக்கள் செய்வதறியாது  திகைத்து வருகின்றனர். அதேசமயம் இலங்கை  தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடியை அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொந்தளிக்கும் மக்கள்.. திணறும் இலங்கை அரசு.. - அவசர நிலை பிரகடனம் வாபஸ்..

இலங்கையில்  கடும் பொருளாதர நெருக்கடி காரணமாக, இலங்கையை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.