கமல் பயணத்தின் அடுத்த கட்டம்!

 
க

தமிழ்சினிமா வரலாற்றில் முக்கிய படமாக இருக்கும் நாயகன் கூட்டணி  35 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும்  இணைகிறது. இதைத்தான் பயணத்தின் அடுத்த கட்டம் என்று கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

க்ஹ்22

 1987 ஆம் ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் பெருவெற்றி பெற்றது.  ஹாட்பாதர் என்கிற ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் உருவானது என்று விமர்சனங்கள் இருந்தாலும் கூட,  முப்பை தாதா குறித்த அந்த கதையும் அந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.  அப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.  

மணிரத்னத்தின் திரையுலக வாழ்க்கையிலும் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையிலும் நாயகன் படம் இருவர்களுக்கும் முக்கிய படமாக இருக்கிறது.  அந்த படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகி வந்தன . ஆனால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது . 

தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த கமலஹாசன்,  அண்மை காலங்களாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருந்தது . அதேபோல மணிரத்தினம்  இயக்கிய சில படங்களும் அவருக்கு பெருவெற்றியை தராமல் இருந்தன.   தற்போது கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் வசூல் சாதனையில் தமிழ் சினிமா வரலாற்றை புரட்டி போட்டிருக்கிறது.   அதேபோல் மணிரத்னம்  இயக்கிய பொன்னியின் செல்வம் திரைப்பட 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.  இருவரும் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து பணி செய்ய இருக்கிறார்கள்.

ம்

 கமல்ஹாசன் நடிக்கும் 234 வது படத்தை மணிரத்தினம் இயக்குகிறார் என்று அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.   இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் -மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் -உதயநிதி ஸ்டாலின் ரென் ஜியாண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வந்த படத்திற்கு இப்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது . 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை முடித்து விட்டு விரைவில் இந்த படத்தை தொடங்க இருக்கிறார் மணிரத்னம்.  இது குறித்த கமல்ஹாசன்,  ’’மீண்டும் நாம் போகலாம்! பயணத்தின் அடுத்த கட்டம்!  ’’என்று பதிவிட்டிருக்கிறார்.

க்ஹ்3
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று  ந்வம்பர் -7 பிறந்தநாள்.   இந்த நிலையில் பயணத்தின் அடுத்த கட்டம் என்று  அவர் சொல்லியிருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.