ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த மகளை அழைத்து சென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்ட தாய்

 
m

 ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மகளை அழைத்து சென்று கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் தாய். கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் அந்தத் தாய் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார்.

 விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் பரமசிவம் வசித்து வருகிறார்.   இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.    இவரது மனைவி பாப்பா.   இத்தம்பதிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ,  ஏழாம் வகுப்பு படிக்கும் தென்னரசு,  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாதவி என்று மூன்று பெண் குழந்தைகள்  உள்ளனர்.

pa

பரமசிவனுக்கும் பாப்பாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது.   நேற்று முன் தினம் இரவு இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.   இரவில் நடந்த சண்டையை மனதில் வைத்துக் கொண்டு பரமசிவம்  காலையில் வீட்டில் சாப்பிடாமல் மதிய உணவு எடுத்துக் கொண்டு போகாமல் வேலைக்கு கிளம்பி இருக்கிறார். 

 இதனால் பாப்பா மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.   காலை 11 மணியளவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த தனது கடைசி மகள் மாதவியை வகுப்பிலிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.   12 மணி அளவில் மகளுடன் ஸ்கூலை விட்டு கிளம்பிய பாப்பா,   வாழவந்தான் கண்மாய்க்கு  செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்தில்  70 அடி ஆழமுள்ள கிணற்றில் மகளைப் பிடித்து தள்ளியிருக்கிறார்.   பின்னர் தானும் விழுந்திருக்கிறார்.  

 அவர்களின் இரண்டு ஜோடி செருப்புகள் கிணற்றில் அருகே இருப்பதை பார்த்துவிட்டு சந்தேகத்தில்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பகல் 2 மணி முதல் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.   மூன்று மணி நேர தேடலுக்குப் பின்னர் 5 மணி அளவில் சிறுமி மாதவியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது.

 இதை அடுத்து உடலை மீட்கும் பணியில் 7 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புத்துறையினர் போராடியிருக்கிறார்கள் அதன் பின்னர் அவரது உடலை மீட்டு இருக்கிறார்கள் இருவரது உடலையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு கொண்டு சென்றிருக்கிறார்கள் தாய் மகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.