இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

 
w

இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 தர்மபுரி மாவட்டத்தில் மாரண்ட அள்ளி அடுத்த தொட்டபாவலி காட்டுக்கொட்டாய்.  இந்த பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.   இவரின் மனைவி லட்சுமி.    இத்தம்பதிக்கு வயதில் பிரசாந்த் என்ற மகனும்,  ஆறு வயதில் லதா என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்.  

su

 மணிகண்டனுக்கும்  லட்சுமிக்கும்   இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்திருக்கிறது.    இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.   இதனால் லட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.  வெகு நேரம் ஆகியும் லட்சுமி  வீடு திரும்பவில்லை.

 லட்சுமி குழந்தைகள் அழைத்துக்கொண்டு லட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருப்பார் என்று நினைத்திருந்தார் மணிகண்டன்.  அதன் பின்னர் தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போன் செய்து இருக்கிறார்.  அங்கு மகளும் வரவில்லை  பேரப்பிள்ளைகயும் வரவில்லை என்று மாமனார் சொல்ல,  அதிர்ந்து போய் இருக்கிறார் மணிகண்டன்.

 இதை அடுத்து உறவினர்கள்,  கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மணிகண்டனின்    தோட்டத்திற்கு சென்றார்கள்.   குழந்தைகள் சடலமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.    தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்துள்ளனர்.   குழந்தைகள் இருவரின் உடலையும் மீட்டுள்ளனர்.  பின்னர் லட்சுமியின் உடலையும் மீட்டுள்ளனர்.   மூன்று உடல்களையும்  பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 குடும்ப தகராறில்  குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.