ஆசனவாயில் கஞ்சா கடத்தல்- வித்தியாசமாக நடந்துவந்ததால் வசமாக சிக்கினார்

 
கஞ்சா

ஆசன வாயில், கஞ்சா பொட்டலத்தை மறைத்து கடத்தி சென்ற போக்சோ குற்றவாளி முருகன், புதுச்சேரி மத்திய சிறையில் கையும் களவுமாக சிக்கினார். திடீரென வித்தியாசமாக நடந்து வந்ததால் சிறை காவலர்கள் சோதனையில், 50 கிராம் கஞ்சாவை பல பிளாஸ்டிக் பைகளால் சுற்றி சிறையினுள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கபட்டது.

மத்திய சிறை கைதிகளுக்கு சிம்கார்டு, போதைப்பொருள் : புதுச்சேரியில் பரபரப்பு  | 4 men given drugs and simcard to central jail prisoners in puducherry |  Puthiyathalaimurai - Tamil News ...
 
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் மொபைல் போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு செல்ல தடையுள்ளது. ஆனால் எப்படியாவது கைதிகள், சிறை காவலர்களை ஏமாற்றிவிட்டு நூதன வழியில் கடத்தி சென்று விடுகின்றனர். சிறையில் கைதிகளில் மன மாற்றத்தில் இயற்கை விவசாயம் மும்முரமாக நடந்து வரும் சூழ்நிலையில் கைதிகளின் நடமாட்டமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் மங்கலத்தை சேர்ந்த போக்சோ வழக்கின் விசாரணை கைதி முருகன்,  கோர்ட்டில் ஆஜராக போலீசார் அழைத்து சென்றனர். பின் மீண்டும் அவரை சிறை வளாகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா பரிசோதித்த சிறை காவலர்கள் உள்ளே அழைத்து சென்றனர். அப்போது  முருகன், திடீரென வித்தியாசமாக நடக்க துவங்கினார். இதனையடுத்து ஏதே தவறாக இருப்பதை உணர்ந்த சிறை காவலர்கள் மீண்டும் சோதனை போட்டனர். அப்போது ஆசன வாயில் ஒரு வாழைப்பழக சைஸில் 50 கிராம் கஞ்சாவை பல பிளாஸ்டிக் பைகளால் சுற்றி சிறையினுள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்த துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், அதனை மேல் விசாரணைக்காக காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தார்.

வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  அய்யனாருக்காக, ஆசன வாயில் முருகன் கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. இது குறித்து காலாப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.