ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் - 5 வது நாளாக போராட்டம்!!

 
tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  கடந்த 12ஆம் தேதி மாணவி தங்கி இருந்த விடுதியில் இறந்து போனதாக கூறப்படுகிறது.  மறுநாள் காலை 6 மணிக்கு போன் செய்த விடுதி நிர்வாகம் உங்கள் மகளை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.  மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே மாணவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இறப்பின் காரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதிலை அளிக்கவில்லை என்று தெரிகிறது.  விடுதி  மாடியில் இருந்து மாணவி குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர் . ஆனால் மாணவி குதித்ததாக கூறப்படும் இடத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை என்று சந்தேகம் கிளப்பும் அவரது  குடும்பத்தினர் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் இருந்ததை உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின்  உடலை  வாங்க மறுத்து தொடர்ந்து அவரது பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 5 வது நாளாக சடலத்தை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.