அன்புச் செழியன் வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக கணக்கில் வராத பணத்தை எடுத்து சென்ற வருமான வரித்துறை

 
anbu seliyan

சினிமா தயாரிப்பாளர் அன்புச் செழியன் மதுரை வீட்டில் மூன்று நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று இரவு 9.30 மணியளவில் நிறைவு பெற்றது. 

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!


பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் ஆண்டவன் கட்டளை, மருது, வெள்ளைக்கார துரை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அதோடு திரை துறையில் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் பைனான்சியராகவும்  இருக்கிறார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சினிமா பைனான்சியர் அலுவலகம், வீடு என அவருக்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தினர். அதே போன்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சொந்த பங்களா, செல்லூர் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம்,  கீரைத்துரை பகுதியில் உள்ள பூர்வீக வீடு உள்ளிட்ட அன்புச்செழியன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு பகல் என மூன்று நாட்களாக சோதனை நடத்தினர். 

மதுரையை சேர்ந்த அன்புசெழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் வருமானத் துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் நடித்த பிகில் பட விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இரண்டு அதிகாரிகள் என மூன்று பேர்  சோதனை செய்த நிலையில் மூன்றாவது நாளான இன்று வருமான வரித்துறை சோதனை நிறைவு இன்று பெற்றது. சோதனை முடிவில் பெட்டி பெட்டியாக கணக்கில் வராத நகை, பணம், ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர்.